புதுச்சேரியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ரசிகர் மன்ற பேனர்கள் அகற்றம்


புதுச்சேரியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ரசிகர் மன்ற பேனர்கள் அகற்றம்
x
தினத்தந்தி 11 April 2022 6:51 PM IST (Updated: 11 April 2022 6:51 PM IST)
t-max-icont-min-icon

கிருமாம்பாக்கம் முதல் முள்ளோடை வரை அனுமதியின்றி வைக்கப்பட்ட ரசிகர் மன்ற பேனர்கள் அகற்றப்பட்டன.

பாகூர்
புதுச்சேரியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர், கட்-அவுட்களை அகற்ற அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டார். அதன்பேரில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில் அலுவலர்கள் கிருமாம்பாக்கம் முதல் முள்ளோடை வரை உள்ள விளம்பர பேனர்கள், கட்-அவுட்களை  அதிரடியாக அகற்றினர்.
நடிகர் விஜய்யின் திரைப்படத்தை வரவேற்று கிருமாம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டதால் ரசிகர்கள் கொதிப்படைந்தனர். பேனர்களை அகற்றியதற்கு ரசிகர்கள் சிலர் கிருமாம்பாக்கம் போலீசாரிடம்  எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story