"தமிழகத்தில் 10 புதிய கலை கல்லூரிகள்" - எந்தெந்த மாவட்டங்களில் தொடங்கப்படுகிறது?
தமிழகத்தில் புதிதாக பத்து கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் புதிதாக பத்து கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் பேசும்போது, தமிழகத்தில் 166.5 கோடி மதிப்பீட்டில் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, திருச்சி மாவட்டம் மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கிருஷ்னகிரி மாவட்டம் தளி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம், கடலூர் மாவட்டம் வடலூர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.
Related Tags :
Next Story