இரும்பு திருட முயன்ற வாலிபர் கைது
இரும்பு திருட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். பரிக்கல்பட்டு பகுதியில் சென்றபோது அந்த வழியாக நள்ளிரவில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.
இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்ததில், கடலூர் மாவட்டம் கோண்டூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராஜி என்கிற மகேஷ் (வயது 27) என்பதும், மூடிக்கிடக்கும் ஆலையில் இரும்பு திருட முயன்றதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மகேசை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story