தனியார் மதுபான தொழிற்சாலை தொழிலாளர்கள் தொடர் போராட்டம்
தனியார் மதுபான தொழிற்சாலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிக்குப்பத்தில் தனியார் மதுபான தொழிற்சாலை உள்ளது. இங்கு சம்பள உயர்வு, நிலுவை சம்பளம் வழங்கக்கோரி தொழிலாளர்கள் கடந்த 4 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுடன் புதுவை தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தொழிற்சாலையில் பணிபுரிய தற்காலிகமாக தொழிலாளர்கள் வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும், தற்காலிக பணியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story