நண்பரின் திருமணத்துக்கு சென்றபோது கால்வாய்க்குள் கார் பாய்ந்து வாலிபர் பலி


நண்பரின் திருமணத்துக்கு சென்றபோது கால்வாய்க்குள் கார் பாய்ந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 12 April 2022 1:35 AM IST (Updated: 12 April 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

நண்பரின் திருமணத்துக்கு சென்றபோது கால்வாய்க்குள் கார் பாய்ந்து ஒருவர் பலியானார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நடைபெறும் நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த 4 பேர் காரில் சென்றனர். அந்த கார் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் வேந்தோணி நான்கு வழிச்சாலை அருகே வந்தபோது நிலை தடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்பு மீது மோதியது.

பின்னர் அந்த கார் நடுரோட்டில் உருண்டு அருகில் இருந்த கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த மதுரை இந்திரா நகரைச் சேர்ந்த தவமணி மகன் பாலமுருகன் (வயது 27) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

3 பேர் படுகாயம்

இதில் காருக்குள் இருந்த திருப்பரங்குன்றம் கூத்தியார்குண்டு பகுதியை சேர்ந்த பிச்சைமணி மகன் அருண்குமார் (29), மதுரை அண்ணா நகரை சேர்ந்த ராமர் மகன் ஜெயக்குமார் (20), இறந்த தவமணியின் சகோதரர் விஜய் (24) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Next Story