நடிகர் ராமராஜன் மீதான வழக்கு ரத்து
நடிகர் ராமராஜன் மீதான வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்ததாக நடிகர் ராமராஜன் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
நட்சத்திர பேச்சாளர்
சென்னை ஐகோர்ட்டில், நடிகர் ராமராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக உள்ளேன். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து பிரசாரம் செய்தேன். 2016-ம் ஆண்டு மே 18-ந்தேதி மாலையில் தென்னிலை 4 ரோடு சந்திப்பில் வாகனத்தில் நின்றபடி பிரசாரம் செய்தேன்.
அதிகாரி புகார்
முறையான அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக தேர்தல் பறக்கும்படை அதிகாரி உலகநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில், என்மீது தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதுவும் 2 நாட்கள் காலதாமதமாக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கரூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 3-ந்தேதி போலீசார் தாக்கல் செய்து உள்ளனர்.
இந்த குற்றப் பத்திரிகையில் எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை. மாஜிஸ்திரேட்டு தன் மனதை செலுத்தாமல், இந்த குற்ற பத்திரிகையை ஏற்றுக்கொண்டு உள்ளார். எனவே, இந்த குற்ற பத்திரிகையை ரத்துசெய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
வழக்கு ரத்து
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கே.பிரபாகர் ஆஜராகி, தென்னிலை 4 ரோடு சந்திப்பு பிரசாரம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதி இல்லை. நீண்ட காலதாமதத்துக்கு பின்னர், இந்த குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர் என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, மனுதாரர் ராமராஜன் மீதான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story