தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் விரும்புகிறவர்களை அரசியலில் இருந்து யாராலும் விரட்ட முடியாது - சசிகலா


தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் விரும்புகிறவர்களை அரசியலில் இருந்து யாராலும் விரட்ட முடியாது - சசிகலா
x
தினத்தந்தி 12 April 2022 11:27 AM IST (Updated: 12 April 2022 11:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழக மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை நிச்சயம் வெற்றி பெறும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை,  

சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கும் தீர்மானம், 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். 

இதுதொடர்பான அறிவிப்பு முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த முடிவை இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு கூறியது.

இந்த நிலையில், இதுகுறித்து இன்று வி கே சசிகலா கூறியிருப்பதாவது;-

“நான் அரசியலில் இருப்பதும், இல்லாமல் போவதும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் எடுக்கக்கூடிய முடிவு. தனிநபராக யாரும் என்னிடம் அதை சொல்ல முடியாது. மேலும் தமிழக மக்கள் மற்றும் தொண்டர்கள் விரும்புபவர்களை அரசியலில் இருந்து விரட்ட முடியாது.

அத்துடன், அதிமுகவின் உடன்பிறப்புகளில் பெரும்பாலானோரின் ஆதரவு எனக்கு உள்ளது. மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை நிச்சயம் வெற்றிபெறும். நாடாளுமன்ற தேர்தலுக்குள் மாற்றம் வரும்” 

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story