பள்ளிகளுக்கு ரூ.494.41 கோடியில் புதிய கட்டிடங்கள் - பொதுப்பணித்துறை முடிவு
தமிழகத்தில் ரூ.494.41 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
2022-23ஆம் ஆண்டிற்கான பொதுப்பணித் துறை (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முதல் அமைச்சர் மு.கஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இந்த நிலையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.494.41 கோடியில் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் புதிதாக கட்டப்படும் எனவும் ரூ.494.41 கோடி மதிப்பில் 3,410 கட்டிடங்கள் கட்ட பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story