’ஃபிரி ஆனவுடன் பேசவும்’ மனைவிக்கு வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பியவரை பீர் பாட்டிலால் குத்திய கணவர் கைது


’ஃபிரி ஆனவுடன் பேசவும்’  மனைவிக்கு வாட்ஸ் அப்  மூலம் மெசேஜ் அனுப்பியவரை  பீர் பாட்டிலால் குத்திய கணவர் கைது
x
தினத்தந்தி 12 April 2022 7:08 PM IST (Updated: 12 April 2022 7:08 PM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே மனைவிக்கு வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பியவரை பீர் பாட்டில் குத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இடிகரை,

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள ஜோதிபுரம் கருப்புரா நகர் பகுதியை சேர்ந்த ஹாருன் என்பவரின் மகன் ஹசன் பாதுஷா என்கிற அபு (22). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரது மனைவியின் செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் வந்துள்ளது. அதில் ’பிரி ஆனவுடன் பேசவும்’ என்று இருந்தது. இதனை பார்த்த அபு அந்த செல்நம்பரை பார்த்தபோது, அது தனது உறவினராக சிராஜ்தீன் (28). என்பது தெரியவந்தது. ஏற்கனவே அபு மனைவிக்கும், சீராஜ்தீனுக்கு பழக்கும் இருந்துள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே பிரச்சனை இருந்துவந்துள்ளது. இதனையடுத்து சிராஜ்தீன் வீட்டிற்கு சென்ற அபு அவருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கோபம் அடைந்த சிபு அங்கிருந்த பீர் பாட்டில் மற்றும் கட்டைகளை எடுத்து சீராஜ்தீன் தலையில் அடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அதனையடுத்து சீராஜ்தீன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து சீராஜ்தீன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அபுவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story