மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது


மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 April 2022 8:19 PM IST (Updated: 12 April 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

லாஸ்பேட்டையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி
லாஸ்பேட்டையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா விற்பனை

புதுவை லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பூங்கா அருகே சிலர் மாணவர்கள், சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை கண்டதும் பூங்கா பகுதியில் நின்றிருந்த சிலர் அங்கிருந்து நைசாக தப்பி ஓட முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் சுற்றி வளைத்து மடக்கினார்கள். இதில் 4 பேர் சிக்கினார்கள். ஒருவர் மட்டும் தப்பிவிட்டார்.

4 பேர் கைது

பிடிபட்ட 4 பேரையும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அவர்கள் 600 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் குறிஞ்சிநகரை சேர்ந்த ஜான் (வயது 24), குமரன் நகரை சேர்ந்த பிரகாஷ் (24), ருத்ரகுமார், பிரவீன் என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய பாரத்தை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story