மின்துறை தனியார் மயத்தை கண்டித்து அரசு ஊழியர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்


மின்துறை தனியார் மயத்தை கண்டித்து அரசு ஊழியர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 April 2022 8:27 PM IST (Updated: 12 April 2022 8:27 PM IST)
t-max-icont-min-icon

மின்துறை தனியார் மயத்தை கண்டித்து அரசு ஊழியர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

புதுச்சேரி
புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில், மின்துறை தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் கவுரவ தலைவர் பாலமோகனன், ஆலோசகர் சீத்தாராமன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர்கள் முனுசாமி, ஆனந்த கணபதி, சிவஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். காலியாக உள்ள பொறியாளர் பதவிகளை ஓய்வு பெற்ற பொறியாளர்களை கொண்டு நிரப்புவதை கைவிட்டு படித்த இளைஞர்களுக்கு அந்த பணியை வழங்க வேண்டும். மின்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story