திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டும் ஆட்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டும் ஆட்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 12 April 2022 9:22 PM IST (Updated: 12 April 2022 9:22 PM IST)
t-max-icont-min-icon

திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டும் ஆட்சி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.128 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டும் ஆட்சி ஆகும். சமூகநீதிப் பாதையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. சமபந்தி போஜனம், சமத்துவ விருந்து என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story