சென்னையில் இருந்து தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையையொட்டி சிறப்பு பஸ்கள்


சென்னையில் இருந்து தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையையொட்டி சிறப்பு பஸ்கள்
x
தினத்தந்தி 12 April 2022 9:56 PM GMT (Updated: 12 April 2022 9:56 PM GMT)

சென்னையில் இருந்து தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையையொட்டி சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு பஸ்களை இயக்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனடிப்படையில் இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில், சென்னையிலிருந்து, தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக 1,200 சிறப்பு பஸ்கள், திருச்சி, கோவை, சேலம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், அரியலூர், மதுரை, நாகர்கோவில், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் ஓசூர் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு இயக்க உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் சென்னைக்கு திரும்பும் வகையில் வருகிற 17-ந்தேதி அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து தேவைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க உத்தரவிட்டுள்ளார்.

Next Story