சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 7வது நாளாக இன்றும் மாற்றமில்லை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் 7வது நாளாக இன்று நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
ஆனால், கடந்த 6 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், 7-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் ஒருலிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story