தொடர் விடுமுறை: சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள்..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 April 2022 9:50 AM IST (Updated: 13 April 2022 9:50 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து 1,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, 

புனித வெள்ளி, ஈஸ்டர், சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு, தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் கூடுதலான சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திட்டமிட்டிருந்தது. 

இந்நிலையில்  தொடர் விடுமுறையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக இன்று முதல் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றும் நாளையும் சென்னையிலிருந்து கூடுதலாக 1,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னையிலிருந்து கோவை, சேலம், நாகை, தஞ்சை, மதுரை, ஈரோடு, திருப்பூர் நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக பிற ஊர்களில் இருந்து ஏப்.17-ஆம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக தமிழ் வருடப் பிறப்பு, புனித வெள்ளியை தொடர்ந்து சனிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story