இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து - கல்லூரி மாணவி உயிரிழப்பு...!


இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து - கல்லூரி மாணவி உயிரிழப்பு...!
x
தினத்தந்தி 13 April 2022 3:15 PM IST (Updated: 13 April 2022 3:07 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்து உள்ளார்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகள் சுபா பாரதி (வயது 20). இவர் திருவாரூர் திரு.வி.க.அரசு கலை கல்லூரியில் பி.ஏ.3-ம் ஆண்டு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவி சுபா பாரதி நேற்று வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் ஜெனித்தா (வயது 20) என்ற மாணவியுடன் கல்லூரிக்கு சென்று உள்ளார்.

இவர்கள் வந்த இருசக்கர வாகனம் ஊட்டியாணி பாலம் அருகே சென்று போது செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் இரு சக்கர வாகனத்தின் பின்னால் மோதி உள்ளது.

இந்த விபத்தில் மாணவி சுபா பாரதியும், ஜெனித்தாவும் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர்.

அதனை அறிந்த அப்பகுதியினர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில் மாணவி சுபா பாரதி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த ஜெனித்தா திருவாரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த வடபாதிமங்கலம் போலீசார் தப்பியோடிய டிராக்டர் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story