தொடர் மழை: சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை...!
தொடர் மழையின் காரணமாக சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில், பெய்து வரும் தொடர் மழை காரணமாக சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் இன்று தடை விதித்துள்ளனர். மழை நின்று இயல்பு நிலைக்கு வந்த பின் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 18-ம் தேதி வரை பொதுமக்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்த நிலையில் மழை காரணமாக தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story