கொட்டி தீர்த்த கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்...!
கள்ளக்குறிச்சியில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் கடந்த இரண்டு நாட்களாக கடும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் 1.15 மணிக்கு திடீரென காற்றுடன் பலத்த மழை பொய்த்து. இந்த மழையானது தொடர்ந்து 45 நிமிடம் வரை கொட்டி தீர்த்தது.
மழையால் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சரிவரி தூர்வாரப்படாத்தால் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து ஆறுபோல் ஓடியது.
இதனால் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்கள் கழிவு நீருடன் கலந்த மழைநீரில் மிகவும் சிரமத்துடன் நடந்து சென்றனர். அதேபோல் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார்,பேருந்து ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
Related Tags :
Next Story