புதுக்கோட்டை: வையாபுரியில் மீன்பிடித் திருவிழா...!
புதுக்கோட்டை அருகே வையாபுரியில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
காரையூர்,
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே உள்ள வையாபுரி நவடி கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
காரையூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடைக்குப்பின் கோடைகாலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதனை அடுத்து வையாபுரி நவடி கண்மாய்யில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கண்மாயில் இறங்கி ஊத்தா,வலை,தூரி,கச்சா ஆகியவைகளை கொண்டு மீன் பிடிக்க தொடங்கினர். அப்போது பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர்.
இதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி,குறவை,ஜிலேபி, கெண்டை , அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன் வகைகள் கிடைத்தன. இதனை மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story