தமிழ்நாட்டில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை...!
தமிழ்நாட்டில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும்போது இன்று தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 22-ஐ விட அதிகமாகும். இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தாக்குதலுக்கு இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என்ற அளவில் உள்ளது.
Related Tags :
Next Story