திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
திருவட்டார்,
மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு திரும்பினர்.
கடந்த பத்து நாட்களாக கோடை மழை மலைப் பகுதிகளில் அதிகமாகவும், நகர்ப் பகுதிகளில் மிதமாகவும் பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் அதிகமாகக் கொட்டுகிறது. அவ்வப்போது பெய்யும் மழை, குளிர் காற்று ஆகியவற்றால் திற்பரப்பில் குளு குளு சீசன் நிலவுகிறது.
அருவியிலும், நீச்சல் குளத்திலும் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story