திடீர் மழையால் நெல் மூட்டைகள் சேதம்


திடீர் மழையால் நெல் மூட்டைகள் சேதம்
x
தினத்தந்தி 13 April 2022 8:30 PM IST (Updated: 13 April 2022 8:30 PM IST)
t-max-icont-min-icon

திருக்கனூர் பகுதியில் பெய்த திடீர் மழையால் கூனிச்சம்பட்டு ஓழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் சேதமடைந்தன.

திருக்கனூர் பகுதியில் பெய்த திடீர் மழையால் கூனிச்சம்பட்டு ஓழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் சேதமடைந்தன.
திடீர் மழை
புதுவை மாநிலம் திருக்கனூர், கூனிச்சம்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இந்த நிலையில் இன்று காலை திடீரென மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை கொட்டியது.
திடீர் மழை காரணமாக கூனிச்சம்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்த நெல், மணிலா, உளுந்து, காராமணி உள்ளிட்ட விளைப்பொருட்கள் நனைந்து சேதமடைந்தன.
நெல் மூட்டைகள் சேதம்
விற்பனைக்கூடத்தில் 3 கொட்டகைகள் இருந்தும் அவை சேதமடைந்து இருப்பதால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விளைபொருட்கள் மழையில் நனைந்தன. மேலும் திறந்தவெளியில் அடுக்கி வைத்திருந்த விளைபொருட்களும் மழையில் நனைந்து வீணானது.
கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் தற்போது முளைப்பு விட தொடங்கியுள்ளன. நிலத்தில் பாடுபட்டு அறுவடை செய்ய நெல்மணிகள் வீணாகி வருவது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது.
சிமெண்டு தளம்
விளைபொருட்களை பாதுகாக்க சேதமடைந்த கொட்டகைகளை சரிசெய்ய வேண்டும், கூடுதலாக 2 கொட்டகைகள் அமைக்கவேண்டும், மூட்டைகளை வைக்க சிமெண்டு தளம் அமைக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story