வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்


வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்
x
தினத்தந்தி 13 April 2022 3:48 PM GMT (Updated: 2022-04-13T21:18:07+05:30)

புதுவையில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து 3 அழகிகளும் மீட்கப்பட்டனர்.

புதுவையில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து 3 அழகிகளும் மீட்கப்பட்டனர்.

வீட்டில் விபசாரம்

புதுவை ஜீவானந்தம் வீதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் தலைமையில் போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.
அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது. அரியாங்குப்பம் சாமிநாத நாயக்கர் தெருவை சேர்ந்த பீட்டர் ஜான் கபிரியேல், மாதாகோவில் வீதியை சேர்ந்த ஜெயா ஆகியோர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அழகிகள் மீட்பு

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் வாடிக்கையாளரான உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த பஷித் அகமது (20) என்பவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் ரூ.1,500 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விவசாரத்தில் ஈடுபட்ட 3 அழகிகளும் மீட்கப்பட்டனர். அவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


Next Story