முன்னாள் அமைச்சரின் மனைவி மீது போலீசில் புகார்
புதுவை முன்னாள் அமைச்சர் மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி வர்த்தக சபையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புதுவை முன்னாள் அமைச்சர் மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி வர்த்தக சபையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புதுவை வர்த்தக சபை தலைவர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
வர்த்தக சபை குடோன்
புதுவை சுப்பையா சாலையில் உள்ள வர்த்தக சபைக்கு சொந்தமான குடோனில் முன்னாள் அமைச்சர் ஷாஜகானின் மனைவி வகீதா கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் நடத்தி வந்தார். அந்த இடத்தில் தொழில் மற்றும் வணிக மேம்பாட்டுக்காக வர்த்தக மையம் அமைக்க நகரமைப்பு குழுமத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதற்காக அங்குள்ள வாடகைதாரர்களை காலிசெய்ய நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றுள்ளோம். இந்தநிலையில் வர்த்தக சபைக்கு எந்தவித தகவலும் தராமல் ஒரு தனியார் நிறுவனத்துக்கு இந்த குடோனை வகீதா வாடகைக்கு விட்டுள்ளார்.
கிரிமினல் நடவடிக்கை
அதுமட்டுமின்றி பாரம்பரிய கலைநயம் கொண்ட கட்டிடத்தை பாதுகாத்திடும் எந்த அமைப்பிடமும் (நகரமைப்பு குழுமம், இன்டாக்) அனுமதி பெறாமல் வர்த்தக சபையிடமும் எந்த அனுமதியும் பெறாமல் கட்டிடத்தின் பழைய தேக்குமர தெராய்களை அகற்றி மேற்கூரையை மாற்றி உள்ளார். உள்ளே கழிவறைகள் அமைத்துள்ளார்.
இது சட்டத்துக்கு புறம்பானதும், வர்த்தக சபையுடனான ஒப்பந்தத்துக்கு விரோதமானதும் ஆகும். இந்த புகார் மனு மீது விசாரித்து வகீதா மீது தக்க கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story