"கோடை காலத்தில் சீரான மின்விநியோகம்" - அமைச்சர் செந்தில் பாலாஜி
கோடை காலத்தில் சீரான மின்விநியோகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை,
கோடை காலத்தில் சீரான மின்விநியோகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித் பேசிய அவர், தமிழகம் முழுவதும் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றன.
கோடை காலத்தை சமாளிப்பதற்கு தேவையான விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முதல் அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, எடுக்கப்பட்டு வருகிறது. புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
கடந்த ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், விவசாயிகளுடன் முதல் அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story