புதுச்சேரியில் மருத்துவ மாணவர்களுக்கு தொற்று
புதுவையில் 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் தலை தூக்கியுள்ளது. புதிதாக மருத்துவ மாணவிகள் 2 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
புதுவையில் 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் தலை தூக்கியுள்ளது. புதிதாக மருத்துவ மாணவிகள் 2 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
இந்தியாவிலும் புகுந்து மிரட்டிய கொரோனாவால் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. புதுவை மாநிலத்திலும் தொற்று பாதிப்பு அதிகரித்து அச்சுறுத்தியது.
முதல் அலையாக கொரோனா கடுமையாக மக்களை தாக்கியது. 2-வது அலையில் பெரிய அளவில் உயிரிழப்பும் ஏற்பட்டது. 3-வது அலையில் பெரிய அளவில் உயிரிழப்பு இல்லை என்றாலும் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதுபோன்ற அலை அலையாக வந்த தொற்று பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளாக மக்களின் அன்றாட வாழ்க்கையை தொலைக்க செய்தது.
ஆனாலும் அரசின் தீவிர கட்டுப்பாடு நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. மத்திய அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டன.
அதேநேரத்தில் பொது இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பதுடன் முக கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வந்தது.
2 பேருக்கு பாதிப்பு
இந்தநிலையில் கடந்த மாதம் 31-ந்தேதியுடன் புதுவை மாநிலத்தில் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. அன்றைய தேதியில் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.
அதன்பின் தொடர்ந்து மாநிலத்தில் யாரும் பாதிக்கப்படாத நிலையில் இருந்து வந்தது. ஆனால் கடந்த 14 நாட்களுக்கு பிறகு தற்போது காரைக்காலில் கொரோனா தலை தூக்கியுள்ளது.
அதாவது மாநிலத்தில் 192 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் காரைக்காலில் 2 மருத்துவ மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 911 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 578 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 279 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 59 ஆயிரத்து 90 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story