போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்தனர்: 300 வடமாநில ஊழியர்கள் சிக்கினர்
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் போலி சான்றிதழ் மூலம் 300 வடமாநில ஊழியர்கள் பணியில் சேர்ந்திருப்பது பள்ளி கல்வித்துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை,
பெரும்பாலான ரெயில்வே, வங்கி, தபால் நிலையம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
வடமாநிலத்தினர் ஆதிக்கம்
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து பட்டம் வாங்கிய இளைஞர்கள் இங்குள்ள மத்திய அரசு நிறுவனங்களிலோ, ரெயில்வே துறையிலோ எளிதாக வேலையில் சேர முடிவதில்லை. வடமாநிலத்தவர்களே அதிகம் சேர்க்கப்படுகிறார்கள்.
வேலையில்லா திண்டாட்டம் அதிகம் இருக்கும் நிலையில், மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
அதிர்ச்சி தகவல்
இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படித்தது போல போலி சான்றிதழ் தயார் செய்து வடமாநிலத்தினர் மத்திய அரசு பணிகளில் சேர்ந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
போலி மதிப்பெண் சான்றிதழ்
தமிழகத்தில் உள்ள கிராம தபால் நிலைய ஊழியர்கள் பணிக்கும், சி.ஆர்.பி.எப். மற்றும் ரெயில்வே பணிக்கு வடமாநிலத்தினர் சிலர் குறிப்பாக பீகார், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பலர் 10-ம் வகுப்பு போலி மதிப்பெண் சான்றிதழ்களை கொடுத்து சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது.
அவ்வாறு அவர்கள் போலியாக சமர்ப்பித்து இருக்கும் சான்றிதழ்களில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையிடம் இருந்து மதிப்பெண் சான்றிதழை பெற்றதுபோல் அச்சிடப்பட்டு உள்ளது. இதில் அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களும் ஒரே மாதிரி பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டு வழங்கப்பட்டு இருக்கிறது.
அந்த சான்றிதழில் ‘ஸ்டேட் போர்டு ஆப் ஸ்கூல் எக்சாமினேசன்ஸ் அன்ட் போர்டு ஆப் ஹையர் செகன்டரி எக்சாமினேசன்ஸ் தமிழ்நாடு' என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அந்தவகையில் இந்த சான்றிதழில் ஏற்பட்ட சந்தேகத்தை தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு சம்பந்தப்பட்ட மத்திய அரசு துறைகளில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுப்பப்பட்டது.
அதன் அடிப்படையில் அரசு தேர்வுத்துறை ஆராய்ந்து பார்த்ததில், அவை போலியான மதிப்பெண் சான்றிதழ்கள் என்று கண்டறியப்பட்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
300 வடமாநிலத்தினர்
இதுபற்றி சம்பந்தப்பட்ட மாநிலங்களின் போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் தமிழ்நாடு பள்ளிக்கல்வியின் கீழ்வரும் அரசு தேர்வுத்துறையுடன் இணைந்து சான்றிதழை சரிபார்த்து விசாரித்து வருகிறார்கள்.
விசாரணையில் உறுதிசெய்யப்பட்ட பிறகுதான், இந்த விவகாரங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தினர் இதுபோல் போலி மதிப்பெண் சான்றிதழை பயன்படுத்தி பல்வேறு மத்திய அரசு பணிகளில் சேர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பணியாற்றி வரும் தகவல்களும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2 பேர் கைது
இதற்கிடையே போலி சான்றிதழ் கொடுத்து மத்திய அரசு பணியில் சேர்ந்ததாக கர்நாடகாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழகத்தை சார்ந்தவர்களை தவிர, பிற மாநிலத்தவர்கள்தான் அதிகம் பேர் இடம்பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில், இந்த போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Related Tags :
Next Story