அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை,
சட்டமேதை அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அரசியல் கட்சி பிரமுகர்கள் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும், மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை அடையாற்றில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர் இறையன்பு, சென்னை மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் முதல்-அமைச்சர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதற்கிடையில், அம்பேத்கர் பிறந்தநாளான இன்று ‘சமத்துவ நாளாக’ கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story