தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு: கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்...!


தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு: கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்...!
x
தினத்தந்தி 14 April 2022 4:29 PM IST (Updated: 14 April 2022 4:29 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டை பொதுமக்கள் கோலாகலமாக வரவேற்றனர்.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 1ம் தேதி தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும். அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டை பொதுமக்கள் கோலாகலமாக வரவேற்றனர். கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அதன்படி, தமிழ்ப் புத்தாண்டையொட்டி அதிகாலை முதலே கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மக்கள் அதிகாலை முதலே கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். அதிகாலை முதலே தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் திரளான பக்தர்கள் வரிசையில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயில், தஞ்சை பெரியக்கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயிகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டையொட்டி கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. பல கோயில்களில் அன்னதானம், பிரசாரம் வழங்கப்பட்டது. 
மேலும் இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

Next Story