15 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து 15 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து 15 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மீன்பிடி தடைகாலம்
கடல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின்படி, ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன், 14-ந் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாகும். இந்த காலத்தில் மீன்களை பிடித்தால், மீன்களின் வயிற்றில் உள்ள சினை (முட்டை) அழிக்கப்பட்டு விடும். எனவே மத்திய-மாநில அரசு இந்த 61 நாட்களில் ஆழ்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்துள்ளது.
இதையொட்டி காரைக்கால், புதுச்சேரியில் இருந்து இருந்து 2 ஆயிரத்து 348 படகுகளில் மீன்பிடிக்க செல்லும் சுமார் 15 ஆயிரம் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்லவில்லை. முன்னதாக நேற்று மாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்களும் உடனடியாக கரை திரும்பினர்.
நிவாரணம்
இதனால் அந்த படகுகள் அனைத்தும் மீன்பிடி துறைமுகம் மற்றும் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன்பிடி தடைகாலத்தில், பெரும்பாலான மீனவர்கள் தங்கள் படகு மற்றும் மீன்பிடி சாதனங்களை பழுதுபார்ப்பதில் தீவிரமாக செயல்படுவார்கள்.
மீன்பிடி தடைக்காலம் குறித்து மீனவர்கள் கூறியதாவது:-
மீன்பிடி தடைக்கால நிவாரணமாக புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் ரூ.5,500 வழங்கி வருகிறது. விலைவாசி உயர்வை கருத்தில்கொண்டு இந்த தொகையை இரு மடங்காக அதிகரித்து தரவேண்டும். டீசல் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதால், மானியவிலையில் (வரி இல்லாமல்) டீசல் வழங்க, மத்திய-மாநில அரசுகள் முன்வரவேண்டும். மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும் போதே தடைகால நிவாரணம் வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story