"திமுக மொழியை ஆயுதமாக வைத்து அரசியல் செய்கிறது" - அண்ணாமலை


திமுக மொழியை ஆயுதமாக வைத்து அரசியல் செய்கிறது - அண்ணாமலை
x
தினத்தந்தி 14 April 2022 10:31 PM IST (Updated: 14 April 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

திமுக மொழியை ஆயுதமாக வைத்து அரசியல் செய்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

தங்கள் மீதான மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க திமுக மொழியை ஆயுதமாக பயன்படுத்தி அரசியல் செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மத்திய மந்திரி அமித்ஷா கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அவர் எதற்காக அப்படி கூறினார் என்றால், அதிகப்படியாக பேசப்படும் மொழியாக இந்தி இருக்கிறது. எனவே தான் அவர் அப்படி கூறினார். அமித்ஷாவின் தாய்மொழி குஜராத்தி. பிரதமர் மோடியின் தாய்மொழி குஜராத்தி, என்று கூறினார்.

மேலும் அவர், மக்களுக்கு திமுக மீது கோபம் இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன என்பதால் தற்காத்துக் கொள்வதற்காக திமுக மொழியை எடுத்து அரசியல் செய்து வருகிறது என்று கூறினார்.

Next Story