பாண்டி மெரினாவில் பட்டம் விட்ட சுற்றுலா பயணிகள்
புதுவை பாண்டி மெரினா கடற்கரையில் சுற்றுலா பயணிகள் பட்டம் விட்டு மகிழ்ந்தனர்.
புதுவை பாண்டி மெரினா கடற்கரையில் சுற்றுலா பயணிகள் பட்டம் விட்டு மகிழ்ந்தனர்.
பட்டம் விடுதல்
புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் புதுவை கடற்கரை, பாண்டி மெரினா, பேரடைஸ் பீச், புதுக்குப்பம் மணற்குன்று கடற்கரை ஆகியவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்று பாண்டி மெரினா கடற்கரையில் பட்டம் விடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு சிறியது முதல் ராட்சத வடிவிலான பட்டங்களை பறக்கவிட்டு மகிழ்ந்தனர்.
கடற்கரை காற்றில் ஆடியபடி பட்டங்கள் மேலெம்பி பறந்தது அனைவரையும் கவருவதாக இருந்தது. அவற்றைக்கண்டு சுற்றுலா பயணிகளும், குழந்தைகளும் குதூகலித்தனர்.
கடல் உணவு
இன்று காலை காலாப்பட்டு முதல் புதுச்சேரி வரை மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் கலந்துகொண்டு முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் பரிசுகளையும் வழங்கினார்.
கடற்கரை காந்தி சிலை அருகே உள்ள கைவினை அங்காடியில் உடல் உணவு விருந்து நிகழ்ச்சியும் நடந்தது. புதுக்குப்பம் மணற்குன்று கடற்கரையில் இசை திருவிழா மற்றும் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
கடற்கரை சாலையில் உள்ள லேகபே அருகில் இன்று இரவு அலங்கார ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் ஒய்யார நடைபோட்டு உற்சாகமாக போஸ் கொடுத்தனர். இதனை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பார்த்து ரசித்தனர்.
Related Tags :
Next Story