அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தி.மு.க.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் முரளி தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் மைதிலி ராஜேந்திரன் வானூர் ஒன்றிய தலைவர் உஷாமுரளி, துணைத்தலைவர் பர்வதம் விநாயகமூர்த்தி அவைத்தலைவர் குப்பன், மாவட்ட ஆதிதிராவிட அமைப்பாளர் வேலு, ஒன்றிய அமைப்பாளர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், மாவட்ட கவுன்சிலர் அன்புமணி மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பாஸ்கரன், மாவட்ட பிரதிநிதிகள் இளங்கோ, மாயகிருஷ்ணன், நெடுஞ்செழியன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சிவா, ஒன்றிய கவுன்சிலர் புவனேஸ்வரி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோட்டக்குப்பம் நகர தி.மு.க. சார்பில் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்திற்கு நகரசபை தலைவர் ஜெயமூர்த்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க., பா.ம.க.
அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், பக்தவச்சலம் ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பேரவை துணைச் செயலாளர் வெற்றி வேந்தன், அ.தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் சுமன்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ம.க. சார்பில் வானூர் ஒன்றிய செயலாளர் சவுந்தர் தலைமையில் பா.ம.க.வினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மத்திய ஒன்றிய பா.ம.க. செயலாளர் மகாலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் தர்மன், மாவட்ட துணைச் செயலாளர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஒன்றிய செயலாளர் கலைமாறன் தலைமையில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்தனர்.
மாநில பா.ஜ.க. வர்த்தக அணி துணைச் செயலாளர் ஜி.கே.ராஜன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொகுதி பொறுப்பாளர் ஞானசேகர், மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருச்சிற்றம்பலம் கிளைச் செயலாளர் அசேன் பாட்ஷா தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட குழு உறுப்பினர் இமயம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மரக்காணம்
மரக்காணத்தில் பழைய பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story