‘நீட்’ தேர்வு மசோதா விவகாரம்: கவர்னர் அளித்த தேநீர் விருந்தை - தமிழக அரசு புறக்கணித்தது
தமிழ் புத்தாண்டையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. ஆளும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் பங்கேற்கவில்லை.
சென்னை,
குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற விழா நாட்களில் கவர்னர் மாளிகையில் கவர்னர் தேநீர் விருந்துக்கு அழைப்பது வழக்கம்.
இதில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., முதல்-அமைச்சரின் செயலாளர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்பது வழக்கம்.
தேநீர் விருந்துக்கு அழைப்பு
கடந்த குடியரசு தினத்தில் கொரோனா பரவல் காரணமாக கவர்னரின் தேநீர் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் சித்திரை மாத முதல் தேதியான தமிழ் புத்தாண்டு தினத்தன்று (நேற்று) கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவதாகவும், அப்போது பாரதியாரின் உருவச் சிலை திறப்பும் நடைபெறுவதாகவும், அதில் தமிழக அரசு மற்றும் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று கவர்னர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அமைச்சர்கள் சந்திப்பு
இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகள் ஏற்கனவே அறிவித்திருந்தன. இந்த நிலையில் நேற்று காலை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் ராஜ்பவனுக்கு சென்றனர். அங்கு கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினர்.
அப்போது, நீட் தேர்வை தமிழகத்தில் விலக்க வேண்டும் என்று சட்டசபையில் சட்ட மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக உங்களிடம் அனுப்பி வைத்தோம். ஆனால் அதை நிறைவேற்றி அனுப்ப நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. சில வாரங்களுக்கு முன்பு உங்களை சந்தித்து முதல்-அமைச்சர் கேட்டபோதும் அதை விரைவாக அனுப்புவதாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனாலும் அதை இன்னும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவில்லை. இது முதல்-அமைச்சருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது எங்கள் பிரச்சினை மட்டுமல்ல. மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினையாக உள்ளது. மாணவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகும். இதில் நடவடிக்கை எடுக்காதது, சட்டமன்றத்தின் மாண்பை குறைப்பதாக உள்ளது. எனவே மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் நீங்கள் இன்று(நேற்று) அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று கவர்னர் ஆர்.என்.ரவியிடம் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
பா.ஜ.க.வினர் வருகை
இந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் கவர்னர் மாளிகையில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறையின் இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன் மற்றும் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் எம்.என்.ராஜா, குஷ்பு, கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், காயத்ரி ரகுராம் உள்பட பலர் கவர்னர் மாளிகைக்கு வந்தனர்.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களுமான தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம் பங்கேற்றனர். த.மா.கா. சார்பில் அதன் தலைவர் ஜி.கே.வாசன் வந்திருந்தார். பா.ம.க. சார்பில் எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம், வெங்கடேஸ்வரன் பங்கேற்றனர். பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பலரும் வந்திருந்தனர்.
பாரதியார் சிலை திறப்பு
இந்த நிகழ்ச்சிக்காக தர்பார் அரங்கத்தின் அருகில் உள்ள வெளியரங்கத்தில் கூடாரம் போடப்பட்டு இருந்தது. அங்கு வட்ட வடிவிலான மேஜைகள் போடப்பட்டிருந்தன. முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், மத்திய அரசு அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், கவர்னரின் சிறப்பு அழைப்பாளர்கள், பத்ம விருது பெற்றவர்கள் என தனித்தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
தேநீர் விருந்து நடைபெறுவதற்கு முன்பாக ராஜ்பவன் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பாரதியார் சிலையை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் ராஜ்பவன் அதிகாரிகள், பாரதியாரின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதி மற்றும் பாரதியாரின் குடும்பத்தினர் மற்றும் பலர் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவியும் அவரது மனைவியும் தேநீர் விருந்து அளிக்கப்படும் திறந்த வெளி அரங்கத்திற்கு வருகை தந்தனர்.
கவர்னரின் புத்தாண்டு வாழ்த்து
கவர்னரின் முதன்மை செயலாளர் ஆனந்த ராவ் பட்டீல் வரவேற்புரை ஆற்றினார். அவர் தனது உரையின் முடிவில், ‘ஜெய் ஹிந்த், ஜெய் தமிழ்நாடு’ என்று குறிப்பிட்டார்.
பாரதியாரின் 139-வது பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட மாநில அளவிலான கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு (4 மாணவர்கள்) ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. கட்டுரைப் போட்டியின் நடுவர்களாக செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.சந்திரசேகரன் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷையன் ஆகியோரை கவர்னர் ஆர்.என்.ரவி அழைத்து சிறப்பித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் சரவணன் நன்றி கூறினார். பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரது இருக்கைக்கும் கவர்னர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சென்று தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் சிற்றுண்டியுடன் தேநீர் விருந்து நடைபெற்றது.
புறக்கணிப்பு
இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் யாரும் வரவில்லை. முதல்-அமைச்சர் புறக்கணிப்பதாக நேற்று காலையில் அமைச்சர்கள் தெரிவித்ததையடுத்து, தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கவர்னர் அளித்த தேநீர் நிகழ்ச்சியை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டனர்.
தி.மு.க. சார்பிலும் யாரும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை. மேலும் தி.மு.க .கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் புறக்கணித்தன.
ஜி.கே.வாசன்
தேநீர் விருந்தில் பங்கேற்ற பின்பு பத்திரிகையாளர்களுக்கு ஜி.கே வாசன் அளித்த பேட்டி வருமாறு:-
கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கும் நிகழ்ச்சி வழக்கமான ஒன்றுதான். இது மரியாதை நிமித்தமாக கலந்து கொள்வது என்பது வழக்கம். இது போன்ற நிகழ்ச்சிகளில் அரசியலை தவிர்ப்பது நல்லது என்பது என்னுடைய கருத்து.
கல்வியில் அரசியலை புகுத்த கூடாது. தமிழ் நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழம்பியுள்ளனர். அரசியல் செய்து மேலும் குழப்ப கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. கருத்து
தளவாய் சுந்தரம்(அ.தி.மு.க) அளித்த பேட்டி வருமாறு:-
கவர்னர் அழைப்பை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர் அறிவுறுத்தலின்படி அ.தி.மு.க. சார்பில் பங்கேற்றோம். நீட் தேர்வு நாடாளுமன்றத்தில் உதயமானது என்பதால் அதை நாடாளுமன்றத்தில்தான் தீர்க்க வேண்டும். நீட் தேர்வில் சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பு கூறி விட்டது. நீட் எதிர்ப்புக்கான சட்ட மசோதாவை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கொண்டு வந்துள்ளார். அது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டது.
மீண்டும் தற்போதைய அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி அவரும் அதை நிராகரித்தார். ஜனாதிபதிக்கு கவர்னர் நீட் மசோதாவை அனுப்புவதற்கு அதிகாரம் உள்ளதா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
இந்த விழாவில் பங்கேற்பது தமிழர்களுக்கு பெருமை என்பதால் பங்கேற்றோம். ஆளும் கட்சி இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தது முழுக்க முழுக்க தவறு. இதுபோன்று ஜெயலலிதாவும் புறக்கணித்தார் என்றால் அது வேறு விவகாரம்.

Related Tags :
Next Story