தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 April 2022 1:16 PM IST (Updated: 15 April 2022 1:16 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

அதே போல் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story