வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டி பலி
வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டி இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அபூர்வம் (வயது 85). தனியாக வசித்து வந்த இவருக்கு திருநள்ளாறு அம்பேத் நகரில் வசிக்கும் தனது மகள் மணிமேகலை 3 வேளை சாப்பாடு கொடுத்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று வீட்டின் அருகே உள்ள நெல்லிவாய்க்காலில் அபூர்வம் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருநள்ளாறு போலீசார் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வாய்க்காலில் இறங்கியபோது அவர் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story