‘மாமனிதன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா
‘மாமனிதன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா புதுச்சேரியில் நாளை நடக்கிறது. இதில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார்.
‘மாமனிதன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா புதுச்சேரியில் நாளை நடக்கிறது. இதில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார்.
மாமனிதன்
நடிகர் விஜய் சேதுபதி ‘மாமனிதன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ-9 தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் சீனு.ராமசாமி இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் புதுச்சேரி-கடலூர் பகுதி வினியோகஸ்தராக யுவர் பேக்கர்ஸ் உள்ளது. படத்தில் 3 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. முதன்முதலாக இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசை அமைத்துள்ளனர்.
இசை வெளியீடு
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா புதுவை மரப்பாலத்தில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது.
விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி, இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை யுவர் பேக்கர்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story