சுயநலப்போக்கை விடுப்பது தான் வாழ்க்கை
சுயநலப்போக்கை விடுப்பது தான் வாழ்க்கையின் உண்மையான உயிர்ப்பு என்று பேராயர் அந்தோணிசாமி பீட்டர் அபீர் கூறியுள்ளார்.
சுயநலப்போக்கை விடுப்பது தான் வாழ்க்கையின் உண்மையான உயிர்ப்பு என்று பேராயர் அந்தோணிசாமி பீட்டர் அபீர் கூறியுள்ளார்.
புதுவை-கடலூர் மறைமாவட்ட பேராயர் (பொறுப்பு) அந்தோணிசாமி பீட்டர் அபீர் விடுத்துள்ள ஈஸ்டர் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
உயிர்ப்பு பெருவிழா
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்தார். ஆனால் அவருடைய வாழ்க்கை அதோடு நின்று விடுவதில்லை. பொதுமக்கள் நாம் இறக்கும்போது மக்கள் நம்மை மறந்துவிடுவார்கள். நம்முடைய வாழ்க்கை இறப்போடு முடிந்துவிட்டதாக பொதுவாக கருதுவோம்.
ஆனால் ஏசுவின் வாழ்க்கை வித்தியாசமானது. அவர் சிலுவையில் உயிரிழந்தார் என்பதுதான் உண்மை. மக்கள் ஈராயிரம் ஆண்டுகளாக அதை நம்பி வாழ்கிறோம். அதுமட்டுமல்லாது அந்த உயர்ந்த ஆண்டவரை நேரில் கண்டவர்களுடைய சாட்சியின் முடிவில் கொடுக்கின்ற செய்தி ஏசு இறந்து உயிர்த்தார்.
நம்முடைய வாழ்க்கையில் நாமும் ஏசுவை பின்பற்றி அவர் வழியில் வாழும் போது என் வாழ்க்கையும் இறப்போடு முடிந்துவிடாது, மாறாக என்னுடைய வாழ்க்கை மீண்டும் வாழ்வு பெறும். உயிர் உயிர்ப்பு பெறும் என்பதுதான் நம்பிக்கை.
இந்த உலகில் நிறைய போர்களும், சண்டைகளும், இன்னும் பல இடங்களில் சமூக நல்லிணக்கம் என்பது மிகவும் குறைந்து வருகின்ற சூழலில் உயிர்த்த ஆண்டவர் கொடுக்கும் செய்தி சமாதானம். இதைத்தான் ஏசு வாழ்ந்துகாட்டி அவருடைய சிலுவை மரணத்தை உயிர்ப்பாக மாற்றினார்.
சுயநலப்போக்கு
அந்த உயர்ந்த ஆண்டவரை பின்பற்றி வாழ முயற்சிப்பவர்கள் குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி, நாட்டிலும் சுயநலப்போக்கை விடுத்து மகிழ்ச்சியோடு எல்லோரையும் ஏற்று வாழும் வாழ்க்கைதான் உண்மையான உயிர்ப்பு வாழ்வாகும்.
எல்லா மக்களுக்குமான அமைதியான வாழ்க்கைக்கு அவர் ஊன்றுகோலாக மட்டுமல்லாமல் உறுதுணையாகவும், அடித்தளமாகவும் இருக்கிறார். இந்த மாபெரும் செய்தியை நமக்கு எடுத்துரைப்பதுதான் ஈஸ்டர் பெருவிழா. இந்த அர்த்தமுள்ள ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடுகின்ற உங்கள் எல்லோருக்கும் மீண்டும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story