தொன்மையான தமிழர் மரபுகள் சிதைக்கப்படுகிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு
தி.மு.க. ஆட்சியில் தொன்மையான தமிழர் மரபுகளும், மென்மையான தமிழ் இலக்கிய மரபுகளும் சிதைக்கப்படுகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க.தொடர்ந்து, தமிழர்களின் மரபுகளையும், மாண்புகளையும், மதிக்கத்தக்க புராதன நினைவுச் சின்னங்களையும், வேரோடு அழிப்பதை தன் வேலையாகக் கொண்டு செயல்படுகிறது. தமிழக அரசின் தமிழ்ப் பாட நூலில், அவ்வையார் அகர வரிசைப்படி அருளிச் செய்த கொன்றை வேந்தன் பாடல்கள் அச்சிடப்பட்டுள்ளது.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று, இல்லறம் அல்லது நல்லறம் அன்று, ஈயார் தேட்டை தீயார் கொள்வர், உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு, ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்று எழுதுவதற்கு பதிலாக, அகர வரிசைகளை சிதைத்து, விருப்பம் போல மாற்றி, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதற்கு அடுத்தபடியாக, ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு என்று கொன்றை வேந்தன் தொடர்கிறது.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற பதிவுகளை நீக்குவதற்கு அதிகாரம் தந்தது யார்?, ஊருடன் பகைக்கின் என்று எழுதுவதற்கு பதிலாக ஊக்கமுடைமை ஆக்கம் கொடுக்கும் கொன்றை வேந்தனில் இல்லாத சொந்த வரிகளை இணைக்க சொல்லியது யார்?, தொன்மையான தமிழர் மரபுகளையும், மென்மையான தமிழ் இலக்கிய மரபுகளையும் சிதைப்பதற்கு யார் உரிமை தந்தது?.
எதிர்ப்பு
இதேபோல மரபுகளை அழிக்கும் ஒரு முயற்சி, திருவாரூரில் நடைபெறுகிறது. இங்கு தெற்கு ரத வீதியின் பெயரை டாக்டர் கலைஞர் சாலை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று திருவாரூர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இறை நம்பிக்கையற்ற மனிதர் பெயரை எதற்காக கோவில் தேர் உலா வரும் தெரு ஒன்றுக்கு ஏன் வைக்க வேண்டும்?.
தமிழக மக்களின் உயர்ந்த எண்ணங்களுக்கும், மரபியல் சிந்தனைகளுக்கும், மதிப்பளித்து திருவாரூர் தெற்கு ரத வீதியின் பெயரை, கருணாநிதி என்ற பெயரில் மாற்றுவதற்கு, நாங்கள் எங்கள் எதிர்ப்பினை பதிவு செய்கிறோம்.
தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, திருவாரூரில் தெற்கு ரத வீதியின் பெயரை மாற்றாது மரபுவழி அதே பெயர் தொடர்ந்து இருக்க ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story