பா.ஜ.க.-விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்: காயத்ரி ரகுராம் உள்பட 80 பேர் மீது வழக்கு
கோயம்பேட்டில் பா.ஜ.க.-விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே நடந்த மோதல் சம்பவத்தில் காயத்ரி ரகுராம் உள்பட இரு கட்சிகளையும் சேர்ந்த 80 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பூந்தமல்லி,
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நேற்று முன்தினம் சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையொட்டி அந்த பகுதியில் பா.ஜனதா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் கொடி கம்பங்கள் நடப்பட்டு இருந்தது.
அப்போது பா.ஜனதா கொடி கம்பம் சாய்ந்து விழுந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் கொடி கம்பத்தை கீழே தள்ளி விட்டதாக கூறி இரு கட்சியினர் இடையே வாக்குவாதம் முற்றி, பயங்கர மோதல் ஏற்பட்டது. பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டனர். இதில் போலீஸ்காரர் உள்பட இரு கட்சிகளையும் சேர்ந்த 5 பேர் காயம் அடைந்தனர்.
80 பேர் மீது வழக்கு
இது குறித்து இரு தரப்பினரும் கோயம்பேடு பஸ் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பா.ஜ.கவை சேர்ந்த காயத்ரி ரகுராம் உள்பட 50 பேர் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 30 பேர் மீதும் என இருகட்சிகளையும் சேர்ந்த 80 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், ஆயுதங்களுடன் கூடுதல், காயம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Tags :
Next Story