ஆபாச படத்தை காட்டி மாணவியிடம் ரூ.7 லட்சம் பறிப்பு - இசைக்கலைஞர் அதிரடி கைது


ஆபாச படத்தை காட்டி மாணவியிடம் ரூ.7 லட்சம் பறிப்பு - இசைக்கலைஞர் அதிரடி கைது
x
தினத்தந்தி 16 April 2022 4:53 AM IST (Updated: 16 April 2022 4:53 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 மாணவியை காதலித்து உல்லாசம் அனுபவித்து விட்டு, அது தொடர்பான ஆபாச வீடியோவை காட்டி, ரூ.7 லட்சம் பணம் பறித்த டிரம்ஸ் இசைக்கலைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை அசோக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அகிலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது-வயது 17). இவர் பிளஸ்-2 படிக்கிறார். இவரது பெற்றோர், அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

எங்களது மகளை காதலிப்பதாக கூறி ஏமாற்றி ஞானப்பிரகாசம் (வயது 20) என்ற வாலிபர் ரூ.7 லட்சம் பணம் மற்றும் தங்க சங்கிலி ஒன்றையும், பறித்து விட்டார். அறியாத வயதில் எங்களது மகளிடம் பழகி மோசடியில் ஈடுபட்ட அந்த வாலிபர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

வாலிபர் திடுக்கிடும் தகவல்

இது தொடர்பாக அசோக்நகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் குறிப்பிட்ட வாலிபர் ஞானப்பிரகாசத்தை அழைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் ஞானப்பிரகாசம் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். அவர் கூறிய தகவல் வருமாறு:-

நான் பிளஸ்-2 வரை படித்துள்ளேன். கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறேன். நான் டிரம்ஸ் இசைக்கலையில் நிபுணத்துவம் பெற்றவன். மேடை கச்சேரியில் கலந்து கொள்வேன். கச்சேரி இல்லாத நாட்களில் பேக்கரி ஒன்றில் வேலை செய்வேன். மாணவி அகிலா 8-வது வகுப்பு படிக்கும் போதே பழக்கம்.

5 வருட காதல்

நாங்கள் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தோம். அகிலாவை திருமணம் செய்வதாக கூறி பல முறை உல்லாசம் அனுபவித்துள்ளேன். அவ்வாறு உல்லாசம் அனுபவிப்பதை அகிலாவுக்கு தெரியாமல், எனது செல்போனில் படம் பிடித்தேன்.

அகிலாவின் பெற்றோர் நல்ல வசதி படைத்தவர்கள். எனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் அகிலாவிடம் பணம் கேட்பேன். அவளும் தருவாள். அவ்வாறு சிறுக, சிறுக ரூ.2 லட்சம் வரை வாங்கினேன். அவள் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலியை கூட எனக்கு கொடுத்து விட்டாள். நான் கார் வாங்க ஆசைப்பட்டேன். அதற்கு ரூ.7 லட்சம் தேவைப்பட்டது. அகிலாவிடம் கேட்டபோது, அவ்வளவு தொகை என்னால் தர முடியாது என்று கூறி விட்டாள்.

நாம் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம். எனவே உனக்கு சேர வேண்டிய பணம், நகை உன் வீட்டில் இருந்தால், என்னிடம் கொடு என்று கேட்டேன். அதற்கும் அகிலா மறுத்துவிட்டாள்.

ஆபாச படத்தை காட்டி....

உடனே செல்போனில் படம் எடுத்து வைத்திருந்த நானும், அகிலாவும் உல்லாசம் அனுபவிக்கும் ஆபாச காட்சியை அகிலாவிடம் காட்டி, இதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினேன். இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.7 லட்சத்துடன் வா, என்று கண்டிப்பாக கூறி விட்டேன். இதனால் பயந்து போன அகிலா, அவளது தந்தை வைத்திருந்த ரூ.7 லட்சம் பணத்தை என்னிடம் வந்து கொடுத்தாள். அந்த பணத்தை வைத்து நான் கார் வாங்கி விட்டேன். அகிலா கொடுத்த ரூ.7 லட்சம் பணம் எங்கள் காதலை அகிலாவின் பெற்றோருக்கு காட்டிக்கொடுத்து விட்டது. அவர்கள் போலீசில் புகார் கொடுத்து விட்டனர். இவ்வாறு ஞானப்பிரகாசம் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

போக்சோவில் கைது

ஞானப்பிரகாசம் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story