"உத்தரபிரதேசத்தில் தமிழ் கற்று கொடுப்பார்களா?" - அன்புமணி ராமதாஸ் கேள்வி


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 16 April 2022 3:10 PM IST (Updated: 16 April 2022 3:10 PM IST)
t-max-icont-min-icon

இந்தி திணிப்பு இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

இந்தி திணிப்பு இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

அனைவரும் இந்தி கற்றுக்கொண்டால் அது இந்தியாவின் ஒற்றுமைக்கு உதவும் என்று அமித்ஷா கூறியுள்ளார். ஆனால் அது நேரெதிரான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தி திணிப்பு என்பது கூடாது. உத்தரப்பிரதேசத்தில் இந்தியும் ஆங்கிலமும் வைத்துள்ளனர். அங்கு தமிழ் கற்றுக்கொடுப்பார்களா? 

எந்த மொழியும் திணிக்கப்படக்கூடாது. அப்படி திணிக்கப்படும் போது அது ஒற்றுமையை ஏற்படுத்தாது. வேற்றுமையையே ஏற்படுத்தும். இதே தான் 1950-60 களில் செய்ய முயன்றார்கள். அந்த நிலை மீண்டும் வரக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story