திண்டுக்கல்: 2 பசுக்களை விஷம் வைத்து கொன்ற வாலிபர் கைது..!


திண்டுக்கல்: 2 பசுக்களை விஷம் வைத்து கொன்ற வாலிபர் கைது..!
x
தினத்தந்தி 16 April 2022 4:31 PM IST (Updated: 16 April 2022 4:31 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே முன்பகை காரணமாக 2 பசுக்களுக்கு விஷம் வைத்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது 49). இவர் தனது தோட்டத்தில் 4 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இவர் தனது மாடுகளுக்கு கடந்த வியாழக்கிழமையன்று ஊருக்குள் இருந்து எடுத்து வரப்பட்ட கழனி தண்ணீரை கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்திலேயே 2 பசுக்களும் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தன. 

இதுகுறித்து கலைச்செல்வி வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இறந்த பசுக்களை பிரேதப் பரிசோதனை செய்தபோது அவை இரண்டும் விஷம் கலந்த கழனி தண்ணீரை குடித்ததால் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது. 

அதன்பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சபரிகார்த்திக் (19) மற்றும் அவரது உறவினர் தங்கதுரை (25) ஆகிய இருவரும் முன்பகை காரணமாக கலைச்செல்வியின் பசு குடிக்கும் கழனி தண்ணீரில் விஷத்தை கலந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து சபரிகார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய தங்கதுரையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story