அன்பும், இரக்கமும் அனைவரது நெஞ்சங்களிலும் நிலைகொள்ளட்டும்
அன்பும், இரக்கமும் அனைவரது நெஞ்சங்களிலும் நிலைகொள்ளட்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது ஈஸ்டர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
அன்பும், இரக்கமும் அனைவரது நெஞ்சங்களிலும் நிலைகொள்ளட்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது ஈஸ்டர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
ரங்கசாமி
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு அன்பையும், அமைதியையும், இளைப்பாறுதலையும் வழங்குகின்ற கருணாமூர்த்தியாகிய ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த மகிமையை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி மகிழ்கிறோம். இதற்காக கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏசுபிரானின் போதனைகள் மனித குலத்துக்கு வழிகாட்டுவனவாகும். கடும் துன்பங்களையும், துயரங்களையும், சோதனைகளையும் கடந்து, ஏசுநாதர் மீண்டும் உயிர்த்தெழுந்த இந்த புனிதநாள், நம் அனைவருக்கும் புதுவாழ்வை தந்திடும் நன்னாளாக அமையட்டும்.
அவர் போதித்த அன்பு, கருணை, இரக்கம் போன்றவை நம் அனைவரது நெஞ்சங்களிலும் நிலைகொள்ளட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிவா
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதுவை மக்கள் அனைவருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஈஸ்டரில் நாம் என்ன நினைத்து வழிபடுகிறோமோ அதற்கு உயிர்ப்பு கிடைக்கும். அந்த உயிர்ப்பின் மூலம் வழிபடுகின்றவர்கள் அனைவருக்கும் உற்சாகம் கிடைக்கும். எனவே சமூகத்தில் மறைந்து வரும் நல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும் உண்மையான நட்பிற்கும், நல்லொழுக்கத்திற்கும் உயிர்ப்பு கொடுக்கும் வகையில் ஈஸ்டர் பண்டிகையில் வழிபடுவோம்.
ஏசு கிறிஸ்துவின் கருணையும், இரக்கமும் மக்கள் அனைவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தழைத்தோங்கட்டும் என்று கூறி இத்திருநாளில் ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.
அ.தி.மு.க. கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் விடுத்துள்ள செய்தியில், ஏமாறுக்காரர்கள், சதிகாரர்கள், சூழ்ச்சிக்காரர்களால் மக்கள் பட்ட துன்பங்களை எல்லாம்போக்கி பாவத்திலிருந்து விடுவித்து நல்வழிகாட்டுவதே ஏசுவின் பெருவாழ்வாக இருந்தது.
கயவர்களிடமிருந்து ஏசு நம்மை காத்து நல்வழி காட்டுவார் என்று நம்பிக்கை கொள்வோம். ஈஸ்டர் பெருவிழாவினை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story