கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் - விண்ணதிர்ந்த கோவிந்தா கோஷம் !
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாசா திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது
சென்னை,
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும், சென்னை தீவுத்திடலில் இன்று சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக முன்னதாக உற்சவர் சாமி சிலைகள் திருமலையில் இருந்து கொண்டுவரப்பட்டது. பண்டிதர்களும் திருமலையில் இருந்து வந்தனர்.
இதையடுத்து சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாசா திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். சீனிவாசா திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியை கண்டுகளித்த பக்தர்கள், கோவிந்தா கோஷமிட்டு சாமிதரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story