பெண்ணுக்கு பாலியல் தொல்லை


பெண்ணுக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 16 April 2022 11:26 PM IST (Updated: 16 April 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணுக்கு பாலியல் தொல்லை தனியார் மருத்துவ கல்லூரி ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெட்டப்பாக்கம் அருகே உள்ள நல்லூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனது தங்கை மூலமாக பண்டசோழநல்லூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. 
சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற சந்தோஷ்குமார், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அவர் தடுக்கவே, ஆத்திரம் அடைந்த சந்தோஷ்குமார் அம்மி குழவி கல்லால் தாக்கி விட்டு தப்பியோடி விட்டார். இதில் காயம் அடைந்த அந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story