கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதயமாகும் காட்சி சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்


கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதயமாகும் காட்சி சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்
x
தினத்தந்தி 17 April 2022 1:19 AM IST (Updated: 17 April 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் சித்ரா பவுர்ணமியன்று ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதயமாகும் காட்சி தெரிவது வழக்கம்.

கன்னியாகுமரி, 

கன்னியாகுமரியில் சித்ரா பவுர்ணமியன்று ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதயமாகும் காட்சி தெரிவது வழக்கம். அதன்படி இந்த அபூர்வ காட்சியை பார்க்க நேற்று மாலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் திரண்டனர். மாலை 6 மணிக்கு சூரியன் மேற்கு பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் சூரியன் மஞ்சள் நிறத்தில் பந்து போன்ற வட்ட வடிவத்தில் கடலுக்குள் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்தது. அதே சமயத்தில் வங்க கடல் பகுதியை ஒட்டியபடி சந்திரன் வான் மேக கூட்டங்களில் இருந்து வெளியே வந்தது.

இந்த கண்கொள்ளா காட்சியை முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் மற்றும் சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் நின்றபடி சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் கண்டுகளித்தனர். அப்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த காட்சியை செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதற்கிடையே கூட்டம் அதிகமாக கடற்கரையில் திரண்டதால் அங்கு அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருப்பதற்காக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story