தொடர்விடுமுறையை முன்னிட்டு கொடைகானலில் குவியும் சுற்றுலா பயணிகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவி வரும் குளுமையான சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
திண்டுக்கல்,
தொடர் விடுமுறையின் காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். அங்குள்ள மோயர் சதுக்கம், பைன் மரச்சோலை, பில்லர் ராக், குணா குகை, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று குடும்பங்களுடன் பொழுதை கழித்தனர்.
இதனிடையே கொடைக்கானலில் நிலவி வரும் குளுமையான சீதோஷ்ண நிலையை அனுபவித்து வரும் சுற்றுலா பயணிகள், அங்குள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அதே சமயம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் கொடக்கானல் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
Related Tags :
Next Story