சேலத்தில் வேன் கடத்தல் -7 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


சேலத்தில் வேன் கடத்தல் -7 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 17 April 2022 4:30 AM IST (Updated: 17 April 2022 4:30 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வேனை கடத்தி சென்ற 7 பேர் கும்பல் அந்த வேனில் வந்த இருவரை மிரட்டி பணம் செல்போனை பறித்த சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூரமங்கலம்:
சேலத்தில் வேனை கடத்தி சென்ற 7 பேர் கும்பல் அந்த வேனில் வந்த இருவரை மிரட்டி பணம் செல்போனை பறித்த சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேன் கடத்தல்
கேரள மாநிலம் பாலக்காடு, போதம் பாதம் பகுதியை சேர்ந்தவர் சமீர் (வயது 27). இவர் கேரளாவில் இருந்து மாங்காய் லோடு ஏற்றிக்கொண்டு வேனில் பெங்களூருவுக்கு சென்றார். ஷேக் முஸ்தபா என்பவரும் உடன் சென்றார்.  நேற்று முன்தினம் மாங்காய் லோடு இறக்கிவிட்டு சேலம் திருவாக்கவுண்டனூர் மேம்பாலம் அருகே வேனில் திரும்ப வந்து கொண்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று வேனை மறித்து நின்றது. பின்னர் அந்த காரில் இருந்து அடையாளம் தெரியாத 7 பேர் இறங்கினர். அவர்கள் சமீரையும் ஷேக் முஸ்தபாவையும் அவர்களுடைய காரில் ஏற்றிக்கொண்டனர். வேனை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சிலர் கடத்தி சென்று விட்டனர்.
பின்னர் காரில் கரூருக்கு சென்ற அந்தகும்பல் அங்கு சமீர் மற்றும் முஸ்தபாவிடம் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டனர். பின்னர் அவர்கள் இருவரையும் கீழே இறக்கி விட்டு விட்டு அந்த கும்பல் காரில் கடத்தி சென்றது.
போலீசார் விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருவரும் சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story