பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது - தமிழக அரசு தகவல்
பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
புதிய ஓய்திய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த, சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, தனது பரிந்துரைகளை அரசிடம் வழங்கியுள்ளது என்றும் வல்லுநர் குழு பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து, உரிய முடிவை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story